நட்பு
நட்பு என்பது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருவது. அதனால் தான் வள்ளுவர் “செயற்கரிய யாவுள நட்பின்“
என்று கூறுகிறார். அதாவது நட்பைப் போல ஒருவன் செய்து கொள்வதற்கு சிறந்த பொருள் எதுவுமில்லை
என்று கூறுகிறார். அதே நேரத்தில் நட்பு என்பது பழகி மகிழ்வதற்கு மட்டுமல்ல. நண்பன்
தவறு இழைக்கும் போது இது தவறு என்று சுட்டிக்காட்டி அவனை திருத்த வேண்டிய பொறுப்பும்
நட்பிற்கு உரிய பொறுப்பு என்று கூறுகிறார். “நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு” என்ற குறள் இதனையே விளக்கி நிற்கிறது. எப்படிபட்ட நண்பரைப் பெற வேண்டும் என்பதை நாலடியார்
பாடல் ஒன்று அழகாக எடுத்துக் கூறுகிறது.
|
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும் |
நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும்
நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் கால் அளவு கூட உதவி செய்யாதவர் நட்பினால் பயன் ஒன்றும் இல்லை.
வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையென்றாலும் கூட துாரத்தில் இருந்து நீரைக் கொண்டு வந்து
வயலை விளைவிக்கும் வாய்க்கால் போன்ற பண்பு உடையவரின் நட்பினை நாடிப் பெற வேண்டும்.
Comments
Post a Comment