குமரி அன்னை
வான்புகழ் வளர் தமிழின் இருப்பிடமாம் !
தேன் சுவை தெய்வத் திருக்குறளின் பிறப்பிடமாம் !
அலைகடலை ஆடையாய் அணிந்தவளாம் !
கலைக்கடலில் கைதேர்ந்த கலைமணியாம் !
உதித்தோங்கும் பரிதியும் குமரியிலே உயர் அழகாம் !
முத்தமிழும் முக்கடலும் சேர்ந்தொழுகும் பேரழகாம் !
தாடகமலையும், காற்றாடி மலையும், மருந்து வாழ் மலையும்
குமரித்தாய்க்கு அரண்களாம் !
பரளியாறு, கோதையாறு, பழையாறு அன்னைக்கு வளம்
சேர்க்கும் ஆறுகளாம் !
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஒருங்கிணைந்த நாடு
நாஞ்சில் நாடாம் !
தென்னையும் வாழையும் ரப்பரும் எம் தாயின் செழிப்பின் அடையாளங்களாம் !
எழுத்தறிவில் உயர்ந்தோங்கி வழிகாட்டும் ஒளி விளக்காம் !
கவிமணியும் செய்குத்தம்பி பாவலரும் இவள் உதிரத்து
உயிர்த்தெழுந்த நற்றமிழ் வித்துக்களாம் !
கலை உலகில் கோலோச்சிய கலைவாணர்
குமரி அன்னையின் பேர் சொல்லும் பிள்ளையாம் !
கல்வி, கலை, அறிவியல், ஆன்மிகம், தொழில்நுட்பம் என
அனைத்திற்கும் முன்னோடியாம் !
அன்னை குமரி என்றும் நம் உயிர்நாடியாம் !
மா. கணேஷ்
தமிழாசிரியர்
9976123132
Comments
Post a Comment