Skip to main content

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்

 பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்!

300 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த பாரத தேசம் எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தினால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. இந்த நாட்டின் நலனிலே அக்கறை கொண்டு நாட்டுப்பற்றுடன் நடந்து கொள்வது தான் நாம் நம் தேசத்திற்கு செய்கின்ற முதன்மையான தொண்டாகும். பல மொழி பல இனம் சார்ந்த மக்கள் நம் நாட்டில் வாழ்ந்தாலும் கூட இந்தியர் என்ற உணர்வோடு நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதையே பாரதி " ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு" என்று கூறுகிறார். ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து இந்தியராக ஒற்றுமையுடன் வாழ்வதே பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பதற்கான முதல் வழி ஆகும். 


" என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்?" என்பதற்கேற்ப நம் நாட்டில் ஏராளமான வளங்கள்கொட்டிக் கிடக்கின்றன. அவ்வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி நம் நாட்டிற்கு தேவையான பொருட்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் நம்முடைய அடிப்படைத்தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள இயலும். அடிப்படைத் தேவைகளுக்காக பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

நாம் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கின்ற பொருட்கள் மீது மோகம் கொண்டு அவற்றை வாங்காமல் நம் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும். 

படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்லாமல் நம் நாட்டிலேயே தங்களுடைய திறமைகளை பயன்படுத்தி நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவலாம்.

அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் நேர்மையான முறையில் நடந்து மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். இளைஞர்கள் வீணான பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கவனம் செலுத்தாமல் பொறுப்புடன் நாட்டு முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்து இன்னும் பல சாதனைகள் புரிவோம் பெற்ற சுதந்திரத்தை பெற்ற தாயைப் போல் பேணி காப்போம்.

Comments

Popular posts from this blog

குமரி அன்னை - கவிதை

குமரி அன்னை வான்புகழ் வளர் தமிழின் இருப்பிடமாம் !  தேன் சுவை தெய்வத் திருக்குறளின் பிறப்பிடமாம் !  அலைகடலை ஆடையாய் அணிந்தவளாம் !  கலைக்கடலில் கைதேர்ந்த கலைமணியாம் !  உதித்தோங்கும் பரிதியும் குமரியிலே உயர் அழகாம் !  முத்தமிழும் முக்கடலும் சேர்ந்தொழுகும் பேரழகாம் ! தாடகமலையும், காற்றாடி மலையும், மருந்து வாழ் மலையும்  குமரித்தாய்க்கு அரண்களாம் ! பரளியாறு, கோதையாறு, பழையாறு அன்னைக்கு வளம் சேர்க்கும் ஆறுகளாம் !  குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஒருங்கிணைந்த நாடு நாஞ்சில் நாடாம் ! தென்னையும் வாழையும் ரப்பரும் எம் தாயின் செழிப்பின் அடையாளங்களாம் !  எழுத்தறிவில் உயர்ந்தோங்கி வழிகாட்டும் ஒளி விளக்காம் !  கவிமணியும் செய்குத்தம்பி பாவலரும் இவள் உதிரத்து  உயிர்த்தெழுந்த நற்றமிழ் வித்துக்களாம் !  கலை உலகில் கோலோச்சிய கலைவாணர்   குமரி அன்னையின் பேர் சொல்லும் பிள்ளையாம் !  கல்வி, கலை, அறிவியல், ஆன்மிகம், தொழில்நுட்பம் என  அனைத்திற்கும் முன்னோடியாம் !  அன்னை குமரி என்றும் நம் உயிர்நாடியாம் ! மா. கணேஷ் தமிழாசி...

காமராஜர் - கவிதை

                           காமராஜர்         சீரிய செயல்களால் மக்கள்        சிந்தையில் நிறைந்தவரே!           நீர் உதிர்த்ததாய்        எங்கள் உதிரத்தில் கலந்த        வார்த்தைகள்        இரண்டு மட்டுமே        அவை,        “ஆகட்டும், பார்க்கலாம்“        ஆனால் - உம்        செயல்கள் எண்ணிலடங்காதவை!        எண்ணி எண்ணி வியக்க வைப்பவை!        கர்மவீரரே        நீர் கட்டிய அணைகள்        உம் புகழொளி வீசும்        அணையா விளக்குகள்!   ...