குமரி அன்னை வான்புகழ் வளர் தமிழின் இருப்பிடமாம் ! தேன் சுவை தெய்வத் திருக்குறளின் பிறப்பிடமாம் ! அலைகடலை ஆடையாய் அணிந்தவளாம் ! கலைக்கடலில் கைதேர்ந்த கலைமணியாம் ! உதித்தோங்கும் பரிதியும் குமரியிலே உயர் அழகாம் ! முத்தமிழும் முக்கடலும் சேர்ந்தொழுகும் பேரழகாம் ! தாடகமலையும், காற்றாடி மலையும், மருந்து வாழ் மலையும் குமரித்தாய்க்கு அரண்களாம் ! பரளியாறு, கோதையாறு, பழையாறு அன்னைக்கு வளம் சேர்க்கும் ஆறுகளாம் ! குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஒருங்கிணைந்த நாடு நாஞ்சில் நாடாம் ! தென்னையும் வாழையும் ரப்பரும் எம் தாயின் செழிப்பின் அடையாளங்களாம் ! எழுத்தறிவில் உயர்ந்தோங்கி வழிகாட்டும் ஒளி விளக்காம் ! கவிமணியும் செய்குத்தம்பி பாவலரும் இவள் உதிரத்து உயிர்த்தெழுந்த நற்றமிழ் வித்துக்களாம் ! கலை உலகில் கோலோச்சிய கலைவாணர் குமரி அன்னையின் பேர் சொல்லும் பிள்ளையாம் ! கல்வி, கலை, அறிவியல், ஆன்மிகம், தொழில்நுட்பம் என அனைத்திற்கும் முன்னோடியாம் ! அன்னை குமரி என்றும் நம் உயிர்நாடியாம் ! மா. கணேஷ் தமிழாசி...