Skip to main content

Posts

Showing posts from August, 2023

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்

 பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்! 300 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த பாரத தேசம் எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தினால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. இந்த நாட்டின் நலனிலே அக்கறை கொண்டு நாட்டுப்பற்றுடன் நடந்து கொள்வது தான் நாம் நம் தேசத்திற்கு செய்கின்ற முதன்மையான தொண்டாகும். பல மொழி பல இனம் சார்ந்த மக்கள் நம் நாட்டில் வாழ்ந்தாலும் கூட இந்தியர் என்ற உணர்வோடு நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இதையே பாரதி " ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு" என்று கூறுகிறார். ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து இந்தியராக ஒற்றுமையுடன் வாழ்வதே பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பதற்கான முதல் வழி ஆகும்.  " என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்?" என்பதற்கேற்ப நம் நாட்டில் ஏராளமான வளங்கள்கொட்டிக் கிடக்கின்றன. அவ்வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி நம் நாட்டிற்கு தேவையான பொருட்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் நம்முடைய அடிப்படைத்தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள ...