காமராஜர் சீரிய செயல்களால் மக்கள் சிந்தையில் நிறைந்தவரே! நீர் உதிர்த்ததாய் எங்கள் உதிரத்தில் கலந்த வார்த்தைகள் இரண்டு மட்டுமே அவை, “ஆகட்டும், பார்க்கலாம்“ ஆனால் - உம் செயல்கள் எண்ணிலடங்காதவை! எண்ணி எண்ணி வியக்க வைப்பவை! கர்மவீரரே நீர் கட்டிய அணைகள் உம் புகழொளி வீசும் அணையா விளக்குகள்! ...
நட்பு நட்பு என்பது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருவது. அதனால் தான் வள்ளுவர் “செயற்கரிய யாவுள நட்பின்“ என்று கூறுகிறார். அதாவது நட்பைப் போல ஒருவன் செய்து கொள்வதற்கு சிறந்த பொருள் எதுவுமில்லை என்று கூறுகிறார். அதே நேரத்தில் நட்பு என்பது பழகி மகிழ்வதற்கு மட்டுமல்ல. நண்பன் தவறு இழைக்கும் போது இது தவறு என்று சுட்டிக்காட்டி அவனை திருத்த வேண்டிய பொறுப்பும் நட்பிற்கு உரிய பொறுப்பு என்று கூறுகிறார். “நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு” என்ற குறள் இதனையே விளக்கி நிற்கிறது. எப்படிபட்ட நண்பரைப் பெற வேண்டும் என்பதை நாலடியார் பாடல் ஒன்று அழகாக எடுத்துக் கூறுகிறது. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும் ...